பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 
stalin

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. 

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரொக்கப் பணம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த போது ரொக்க பரிசு வழங்கபடவில்லை. இதனையடுத்து இந்த முறை ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க்ப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்குவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசன நடத்தினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.