ரூ.5000 கோடி மதிப்பீட்டில் டி.எல்.எப் நிறுவனத்தின் புதிய கட்டுமான பணிக்கு முதலமைச்சர் அடிக்கல்

 
dlf

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில், 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டி.எல்.எப் நிறுவனத்தின் புதிய கட்டுமான பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார்

சென்னை தரமணி இணைப்புச் சாலையில் 27 ஏக்கர் பரப்பளவில், 5000 கோடி ரூபாய் மதிப்பில் டி.எல்.எப் டௌன்டௌன் என்ற பெயரில் புதிய கட்டிடம் அமைய உள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் சார்டெர்டு நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகம் அமையாவுள்ளது. உலகதரத்தில் கட்டப்படும் இந்த நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பல நிறுவனங்கள் அமைய உள்ளது. இதன் மூலமாக 2025 ஆம் அண்டிற்குள் 20 லட்சம் நபர்களுக்கு நேரிடையகாவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கவும், வெளிநாடு முதலீடுகள் ஈர்க்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

mk stalin

மேலும், இந்த கட்டடத்தின் அமைப்பு மற்றும் செயல்முறை. பணியாளர்களின் பணி சூழல் உள்ளிட்டவை உலகளாவிய தரத்தில் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் இந்த கட்டடத்தின் மாதிரியினை பார்வையிட்ட்டார்.  இந்த நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா உள்ளோட்டோர் கலந்துகொண்டனர்.