முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்பட 550 பேர் மீது வழக்கு

 
ட்

 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பிக்கள் உள்பட 550 பேர் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருச்சி கோட்டை போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.

 நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவின்போது திமுக பிரமுகர் நரேஷ்,  ராயபுரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற போது கையும் களவுமாக பிடிபட்டார்.   அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

 இது குறித்த விவகாரத்தில் ஜெயக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   38 மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் திரண்ட அதிமுகவினர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.   ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ட்

 திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி,  பரஞ்சோதி,  சிவபதி,  பூனாட்சி,  அண்ணாவி மற்றும் முன்னாள் எம்பிக்கள் குமார்,  ரத்தினவேல் உள்ளிட்ட 550 அதிமுகவினர் மீது மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

 பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்வது,  அனுமதி இல்லாமல் அதிக கூட்டம் கூடுதல் , பிளக்ஸ் பேனர்கள் வைத்தல்,  கொரோனா காலத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிப்பது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மலைக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.