அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி மனு

 
admk office

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி கே.சி.பழனிசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அந்த பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலால ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக வைத்திலிங்கம் மற்றும், கே.பி. முனுசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டன்ர். இதேபோல் இணை ஒருங்கிணைப்பாளராக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். 

ops

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

high court

இந்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி கே.சி.பழனிசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், இரு பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுக சட்டவிதிகளுக்கு எதிரானது எனவும், 
பொது செயலாளர் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

இதனிடையே இந்த மனு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது