ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு!!

 
tn

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.

அதிமுகவில்  ஒற்றை தலைமை வவிஸ்வரூபம் எடுத்துள்ளது.  ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றனர் .அதிமுக பொதுக்குழு கடந்த 23ஆம் தேதி கூடிய நிலையில் தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்த சூழலில் ஓபிஎஸ் கட்சியின் பொருளாளர் பதவிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அதிமுக பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி நேற்று அதிமுக அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

tn
இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் அங்கு  மோதல் ஏற்பட்டது. இதில் தொண்டர்கள் காயமடைந்தனர் மோதலில் காயமடைந்த பெரம்பூர் அதிமுக நிர்வாகி மாரிமுத்து  ரத்தக்காயத்துடன் வெளியே வந்ததால் பரபரப்பு உண்டாகியது. “எடப்பாடி ஆதரவாளரா? என கேட்டு கேட்டு தாக்கினர் என்று அவர் தெரிவித்திருந்தார்.

admk office

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மாரிமுத்து என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  கடந்த 18ம் தேதி நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகி மாரிமுத்து புகார் அளித்துள்ள நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.