#JUSTIN மாணவர்கள் செல்போனுடன் பள்ளி வந்தால் திருப்பி தரப்படாது!!

 
anbil magesh

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் அது பறிமுதல் செய்யப்படும்.  பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் திருப்பி வழங்கப்பட மாட்டாது. பள்ளிகள் திறந்து முதல் ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பிறகுதான் வகுப்புகள் தொடங்கும் .11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள் ,காவல்துறையைக் கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

anbil-mahesh-3

நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.  எந்த சட்ட போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.  ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.  அதன் காரணமாக ஜிஎஸ்டி நிலுவைத்தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது . முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல்;  இது ஒட்டுமொத்த இந்தியாவையே ஏற்றுக் கொள்ள வைத்துள்ளது.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற குரலும் நியாயமான குரல்;  அதிலும் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்றார்.

anbil
தொடர்ந்து பேசிய அவர்,  "மாணவர்கள் சீருடை,  புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது . 12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.  இந்த ஆண்டில் 9 ஆயிரத்து 494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.  மேலும் ஆறு மாதங்களுக்குப் பின்பு இந்த ஆண்டுதான் வழக்கமாக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும். இல்லம் தேடி  கல்வி திட்டம் படிப்படியாக நிறுத்தப்படும்" என்றார்.