நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

 
சென்னை வானிலை ஆய்வு மையம்

14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நாளை தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி,  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை , திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி , புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும்,  நாளை மறுநாள் மற்றும் அதற்கடுத்த 2 தினங்களில்  ( செப்டம்பர் 27 ,   28,   29ஆம் தேதிகளில்)  தமிழ்நாடு,  புதுச்சேரி,  காரைக்காலில் ஒரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.