தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை !!

 
rain

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதியின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் முதல் 11-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த  24 மணி நேரத்திற்கு ஒரு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.

karur rain

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு மயிலாடுதுறை, சீர்காழி ஆகியவற்றில் அதிகபட்சமாக 5 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. 
மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.

rain

அதேசமயம் தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.