13 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

 
r

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில்  அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவித்திருக்கிறது.

r

தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்,  அதற்கு அடுத்து 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடை கூடும் என்றும் , மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி  வட தமிழகம்,  புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அருகே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி  காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   லேசான அல்லது இதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது.