தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

 
rain

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று (27.12.2022) குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று (28.12.2022) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக வருகிற 30ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31.12.2022 மற்றும் 01.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு :

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் (திருநெல்வேலி) 12 செண்டி மீட்டர் மழையு,, ஆயிக்குடி (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி). திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 5 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.