ஓபிஎஸ் உடன் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது - டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!!

 
tn

வருங்காலத்தில் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய வாய்ப்புள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு முதல்வர் பதவியை சசிகலா ஏற்க இருந்தது.  இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலாவின் அழுத்தத்தின் பெயரிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த நிலையில்  சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார்.  இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற தொடங்கினர் . கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது.

tn

சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியின்   அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் விடுவிக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்குமான மோதல் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என வலுத்து வருகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு எனும் மூன்றாக பிரிந்துள்ளது.  இந்த சூழலில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுடன் பேசி வந்த சசிகலா ஒரு புறம் இருக்க,  நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஓபிஎஸ் தரப்பு முடிவு எடுத்துள்ளது.

sasikala dinakaran
இந்நிலையில் டிடிவி தினகரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,  கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க டெல்லியை சேர்ந்த நலம் விரும்பிகள் விரும்பினர்.  எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு நபரை முதலமைச்சர் வேட்பாளராக  முன்னிறுத்தினால் அதை தான் ஏற்க இருப்பதாக தெரிவித்தேன். ஆனால்  எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

ep
நடராஜன் இறப்பின் பின் சசிகலாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் 15 நாட்கள் பரோல் வழங்க தயாராக இருந்தபோது , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஐந்து நாட்களுக்கு மேல் பரோல்  தரக்கூடாது எனவும்,   அரசியல் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அரசு தெரிவித்த போது தான் அவரது கொடூர முகம் தெரிந்து வந்தது.  எதிர்காலத்தில் ஓபிஎஸ் உடன்  இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது . ஆனால் எடப்பாடி பழனிசாமி உடன் இணைய வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை . அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவராக அவர் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.