சென்னை விமான நிலையம் : பயன்பாட்டுக்கு வருகிறது அதிநவீன கார் பார்க்கிங்..

 
airport

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆறடுக்கு வாகன நடத்தும் இடம் ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

விமான நிலையத்தில் நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் விமான நிறுத்தும் இடங்கள் அதிகரிப்பு மற்றும் புறப்படும் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை நிறுத்த ரூ. 230 கோடி  மதிப்பீட்டில் ஆறு அடுக்குகள் கொண்ட அதிநவீன வாகன நிறுத்தும் இடம் கட்டப்பட்டது.  கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த வாகனம் நிறுத்துமிடம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரவுள்ளது.

சென்னை விமான நிலையம் : பயன்பாட்டுக்கு வருகிறது அதிநவீன கார் பார்க்கிங்.. 

 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த பார்க்கிங்கில் ஒரே நேரத்தில் 2000க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தலாம்.  மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் முனையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு வாகனங்களை நிறுத்த புதிய கட்டணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பழைய நிறுத்துமிடத்தில் கார்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில்,  தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேன், டெம்போ, இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.  இது பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  புதிய கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.