சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

 
gold gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வருவதன் எதிரொலியாக பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதால் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. 

ukraine

இதனால் கடந்து 10 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று 4,885 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் அபரண தங்கம் விலை இன்று 21 ரூபாய் அதிகரித்து 4,906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று 39,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று 168 ரூபாய் அதிகரித்து 39,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

gold

இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று 74,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி இன்று 600 ரூபாய் அதிகரித்து 74,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.