#JUSTIN அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிகள் - ரூ.1 கோடி நிதி விடுவிப்பு!!

 
tn

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரை ஒட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிக்கு ரூ.1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரை ஒட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டிக்காக வட்ட, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை, சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.1 கோடி நிதி விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.  

tn

இதுகுறித்து 2022- 2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அன்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

tn

 மாணவர்களின் நுண்ணறிவுத் திறன், செயல்பாட்டுத் திறன், ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட, மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும், சென்னையில் வரும் ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவும் ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.