கைதானவுடன் நெஞ்சுவலி.. சிகிச்சைக்குப் பின் கே.பி.ராமலிங்கம் சிறையிலடைப்பு ..

 
பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது..

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஜக மநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சிகிச்சை முடிந்து  சிறையில் அடைக்கப்பட்டார்.  

பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது..

தருமபுரி மாவட்டம்  பாாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நிவைாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த விவகாரத்தில் பாஜக முன்னாள் எம் பி  கேபி. ராமலிங்கம்  கடந்த 14 ஆம் தேதி  கைது செய்யப்பட்டார்.   பின்னர்  பாஜக முன்னாள் எம்.பி. கே.பி ராமலிங்கம்  ப்ளட் பிரசர், நெஞ்சுவலி உள்ளிட்ட உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பதாக  தெரிவித்ததை அடுத்து, போலீஸார்  பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து  தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ பரிசோதனைக்காக மாற்றப்பட்டார்.

பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது..

 அங்கு அவருக்கு ஈசிஜி, ஆஞ்சியோ உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகளும் செய்யபட்டது. பின்னர் அங்கிருந்தும் சேலம் அரசு மருத்துவமனைக்கு  மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்  கேபி. ராமலிங்கம். இதற்கிடையே அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பென்னாகரம் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இதனையடுத்து சிகிச்சை முடிந்து நலம்பெற்ற  கே.பி.ராமலிங்கத்தை போலீஸார் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். ஆனால் தமக்கு தொடர்ந்து நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி அவர் சிறைக்குச் செல்ல மறுத்து வந்திருக்கிறார்.  

பின்னர் அவரை பரிசோதித்த சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பிரச்சனை எதுவும் இல்லை எனக்கூறி டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். இதனையடுத்து போலீஸார் கே.பி.ராமலிங்கத்தை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.