#JUSTIN குடியரசு துணைத் தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

 
tn

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்தார்.

tn

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒருநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.  சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்ற அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் , உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.   இந்நிலையில் இன்று காலை 10:30 மணி அளவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து மு.க. ஸ்டாலின் வாழ்த்து கூறினார்.  குடியரசு துணை தலைவரை  சந்தித்தபோது முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

mk stalin
இதையடுத்து 11:30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை  சந்தித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் மாலை 4:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் . செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஸ்டாலின் , நீட் விலக்கு மசோதா,  ஜிஎஸ்டி நிதி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.