#BREAKING உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
tn

ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

tn

உதகை தாவரவியல் பூங்காவில் 5 நாட்களுக்கு நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று முதல்  24ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்துடன் மலர் கண்காட்சியை கண்டுகளித்தார். 35 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கும் பல லட்சம் வண்ண மலர்கள் கொண்ட கண்காட்சியை பலரும் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

tn

மலர் கண்காட்சியில் ஐந்து லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ள நிலையில்  மேரி கோல்ட், பிரஞ்ச் மேரி கோல்ட், பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா உட்பட 275 ரகங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கொத்தர், பணியர், இருளர், முள்ளு குறும்பர், காட்டு நாயக்கர் போன்ற பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6000 மஞ்சள்நிற கார்னேஷன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.