தமிழகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin stalin

தமிழகத்தில் வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள் காந்தி சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு புகழஞ்சலில் செலுத்தியுள்ளார். அந்த பதிவில், பேதங்களைக் கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்த அண்ணல் காந்தியார் பிறந்த நாளில், சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை; இது காந்திய மண் எனச் சூளுரைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.