ஏப்.2ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் - காரணம் தெரியுமா?

 
tn

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறப்பதற்காக முகஸ்டாலின் டெல்லிக்கு பயணிக்கிறார்.

டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம் ஆண்டு இடம் ஒதுக்கப்பட்டது.  டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருகில் திமுக அலுவலக கட்டுமான பணிகள்  நடைபெற்று வந்தது.  இதை அவ்வப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அமைச்சர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.

tn

நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து ஏழு உறுப்பினர்களைக் பெற்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ,மத்திய ,மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்ட இடம் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த 2006ஆம் ஆண்டு உறுதி அளித்த நிலையில் திமுகவின் அலுவலகம் தற்போது டெல்லியில் கட்டப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்துள்ளது.

tn

இந்நிலையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை  ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.  தமிழக முதலமைச்சரான பின் மூன்றாவது முறையாக டெல்லிக்கு பயணிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து பதினைந்து எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு 500 சதுர மீட்டர்,  25 எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு ஆயிரம் சதுர மீட்டர்,  50 எம்.பி.கள் உள்ள கட்சிகளுக்கு 2000 சதுர மீட்டர்,   100 எம்.பி.க்கள் வரை உள்ள கட்சிகளுக்கு ஒரு ஏக்கரும்,  200 எம்.பி.க்கள் உள்ள உள்ள கட்சிகளுக்கு இரண்டு ஏக்கரும்,  200 க்கும் மேல் எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு 4 ஏக்கர் நிலமும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது கவனிக்கத்தக்கது.