குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர்

 
tn

டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மேட்டூர் அணையிலிருந்து மே மாதத்தில் நீர் திறப்பது இதுவே முதல் முறையாகும் . ஜூன் 12ஆம் தேதி 18 முறை நீர் திறக்கப்பட்டுள்ளது.  திறக்கப்படும் தேதியை கடந்து 60 முறை தாமதமாக நீர் திறக்கப்பட்டது.  ஆனால் முதல்முறையாக முன்கூட்டியே மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பது என்பது இதுவே முதல் முறையாகும் . 

tn

அதேசமயம் மேட்டூர் அணை வரலாற்றில் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பே 11வது முறையாக அனைத்து திறக்கப்பட்டுள்ளது .கடந்த 2011 ஜூன் 12க்கு முன்பாகவே நீர் திறக்கப்பட்டது . மேட்டூர் நீரால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில்  லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பாசனம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12 டெல்டா மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். 

முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் 

 * மேட்டூர் அணையிலிருந்து மிக முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

 * மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரானது முழுமையாக டெல்டா பாசன பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும். 

 * மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப்பகுதிகளில் வழக்கத்தைவிட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப் படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும்
வழிவகுக்கும். 

 *  டெல்டா பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டதால் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது. 

 * நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல்மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது.

காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டிஎம்சி வழங்கியும், மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீ ர் ஆனது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்.

குறுவை பாசனத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டிஎம்சி தண்ணீ ரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டிஎம்சி தண்ணீ ரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு இன்று (24.5.2022) காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, இன்று மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும். சம்பா மற்றும் தாளடி பாசனம் மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டிஎம்சி தண்ணீ ர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.