மலையாளத்தில் ஓணம் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்

 
stalin

 ஓணம் திருநாளையொட்டி   தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். 

TN

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். அதில், மகாபலி மன்னனை மலர்களால் வரவேற்கும் அனைத்து மலையாளிகளுக்கும் எனது வணக்கங்கள்.எத்தனை கதைகள் புனைந்தாலும் சன்மார்க்க அரசனை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது! கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள் ஓணம் பண்டிகை புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிப்பதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன இது திராவிடர்களுக்கு இடையே உள்ள ஆழமான தொடர்பை காட்டுகிறது கருத்து வேறுபாடுகளை கலைந்து உறவை வலுப்படுத்துவோம் என்று குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.