'எண்ணும் எழுத்தும் திட்டத்தை' தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

 
rn


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்  ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கிவைத்தார்.  

mk Stalin biopic

திருவள்ளூர், புழல் அருகே அழிஞ்சிவாக்கம் பகுதியில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. அப்போது கற்றல் கற்பித்தல் உபகரணங்களையும், ஆசிரியர் கையேடுகள் மற்றும் பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

mk stalin

அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கமாக இருக்கிறது. தொடக்க கல்வி என்பது சமூகத்தின் திறவுகோல். தாகத்தை தீர்க்கும் நீர் போல கல்வி தாகத்தை தீர்க்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது . 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு, எழுத்தறிவு பெற வேண்டும் என்பதே நோக்கம். எண்ணும் எழுத்தும் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் ஏற்றமடையும் . ஆசிரியர்களின் கருத்து கேட்கப்பட்டு எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட கற்றல் இழப்பை குறைக்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எளிமையான வகையில் பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.கதை, ஆடல், பாடல் என பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார்.  இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதன்மை செயலாளர் காகர்லா உஷா, கல்வி ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.