"எந்த முதல்வராவது டிரைலர் வெளியிட்டு விழாவிற்கு செல்வாரா?" - ஸ்டாலினை சாடிய அண்ணாமலை

 
annamalai

முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லிக்கு செல்லவே பயமாக உள்ளது என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

stalin

இந்நிலையில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே பாஜக சார்பில் சாதனை உழைக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்பித்தார் . நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் , 70 ஆண்டுகால தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை உள்ளது. இம்மாவட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதே பாஜக நோக்கம்.  முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லிக்கு செல்லவே பயமாக உள்ளது. அதனால் தான் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  நிதி அமைச்சர் பிடிஆர் ஆகியோரும் டெல்லி செல்ல தயங்குகிறார்கள்.  பாஜக அருகே வருவதற்கு ஒரு தகுதி வேண்டும் . திமுகவில் எந்த தலைவருக்கு பாஜக தொண்டனுடன் நிற்கும் தகுதி உள்ளது. இது ஒரு ஸ்டிக்கர் அரசு. திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கு முன்னரே நான் படித்த கல்லூரி தொடங்கப்பட்டு விட்டது. நான் படித்ததற்கு திமுக காரணமா என்று எனக்கு  தெரியாது. ஆனால் நான் அரசியலுக்கு வந்ததற்கு திமுகவின் நாசகார ஆட்சி தான் காரணம். 

Annamalai

பொன்னியின் செல்வன் பட ட்ரைலரை முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். இந்தியாவில் வேறு எந்த முதல்வராவது டிரைலர்  வெளியிட்டு விழாவிற்கு செல்வாரா? அடுத்து வரக்கூடிய படத்திற்கு முதல்வர் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார் . உத்தரவு தாக்கரே குடும்பம் போல இங்கே ஸ்டாலின் குடும்பம் உள்ளது . சிவசேனா கட்சியை போல இந்த தமிழகத்தில் திமுக உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் பத்து பொருத்தமும் சரியாக உள்ளது என்றார்.