தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!!

 
stalin

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

CM Stalin

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 26ம் தேதி தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.   அத்துடன் வேட்புமனுவை திரும்பப் பெற இன்றுடன் கடைசி நாள் என கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று மாலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

election

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் துறை உயர் அலுவலர்கள் உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் , சட்ட ஒழுங்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய  கூட்டத்தின் முடிவில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.