"நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
ttn

சென்னையின் 383வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

tn

தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து வருபவர்களுக்கும் சரி,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருபவர்களுக்கும் சரி , சென்னை எப்போதுமே ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.  எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களை வரவேற்று,  அரவணைத்து,  அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதே இல்லை எனலாம்.  அந்த வகையில் ஒவ்வொரு  ஆண்டும் ஆகஸ்ட்  22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.




இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.  அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.  இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.