தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்..

 
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.. 

மதுரையில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.  

மதுரையில் இருவேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரைக்குச் சென்றார்.  அங்கு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்  மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  செயல்படுத்தப்படும்  தூய்மை பணியாளர்களை மேம்பாட்டு திட்டத்தை மதுரை மாநகராட்சியில் உள்ள வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.   தொடர்ந்து அதற்கான லட்சினையையும் வெளியிட்டார்.  சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 6, மதுரை மாநகராட்சியில் இருக்கின்ற மண்டலம் 3, பொள்ளாச்சி, புதுக்கோட்டை மற்றும் சேரன்மாதேவி ஆகிய பேரூராட்சிகளில் முதற்கட்டமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.. 

பின்னர் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  அதன் பின்னர்  தூய்மை பணியாளர்களுக்கான செயலியையும் தொடங்கி வைத்த அவர்,  மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க. கவுன்சிலர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் சால்வைகளை பெற்று கொண்டார். இந்த விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.