கோவை தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்!!

 
ttn


தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.  தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்குவதில்லை. கோவை மாநகராட்சியில் தனியார் மூலம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தினச் சம்பளம் ரூ.721. ஆனால், ஒப்பந்ததாரர் ரூ.323 மட்டுமே வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.எனவே, அரசு நிர்ணயித்துள்ள தினச் சம்பளத்தை வழங்க வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ttn

இந்நிலையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . தூய்மை பணியாளர்கள் டவுன் ஹால் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ttn

இந்த சூழலில் கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில்   ஊதிய உயர்வு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும்” என்றும் பேச்சுவார்த்தைக்கு பின் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.