அதில் கைதேர்ந்தவள்.. ஒரே நேரத்தில் பல ஆண்களை நிர்வகித்து வந்திருக்கிறாள் - கலர்ஸ்டிவி விஜி மீது தாமரை அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

 
vi

இளைஞர்கள், இளம்பெண்கள் இதுபோன்ற தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு ! என்று கவிஞர் தாமரை மீண்டும் கலர்ஸ் டிவி விஜி பற்றி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதில்,  ‘’21.12.22. ஜூ.விகடனில் வெளிவந்துள்ள கட்டுரை முழுமையானதல்ல ! பக்க நெருக்கடி காரணமாக சில குறிப்புகளை மட்டுமே தொட்டிருக்கிறார்கள்.  விஜயலட்சு"மியின் கதையை எழுத வேண்டுமானால் 52 வார தொடர்கூடப் போதுமோ என்னவோ !!! . ’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ko

அப்பதிவில் மேலும்,  ‘’ 30 வயது மகனை இழந்து கதறிக் கொண்டிருக்கும் குடும்பம்... அவனோடு சேர்ந்து நாங்களும் சாகிறோம் என்று துணியும் பெற்றோர்... நீங்களும் போய்விட்டால் எனக்கு வேறு யார் என்று அழுது, அவர்களைப் பாதுகாக்க முனையும் மணமான தங்கை... வீடே சவக்காடாக இருக்கிறது...
    விஜிக்கு இது ஒன்றும் புதிய காட்சியில்லை. எந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாலும் அந்த வீட்டில் ஒரு பூகம்பமாவது வெடிக்காமல் போகாது. எதையாவது சாக்கு வைத்து ஒவ்வொரு வீட்டிலும் நுழைவாள்.. நாட்கணக்கில் 'டேரா' போடுவாள், நிலைமையை கணிப்பாள், என்ன செய்தால் தனக்கு இலாபம் என்று பார்ப்பாள், அடைந்துவிட்டு போய்க் கொண்டேயிருப்பாள். அவள் முதுகுக்குப்பின் கேட்கும் ஓலத்தைப் பற்றி அவளுக்கென்ன கவலை ?? 

    ஏராளமாகப் பணம் வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும், விலையுயர்ந்த உடைகள் அணிகலன்கள் பொருட்கள் வேண்டும், கார் வேண்டும், பெரிய வீடு வேண்டும், விமானப்பயணம் வேண்டும், வெளிநாடு பார்க்க வேண்டும், நட்சத்திர விடுதி வேண்டும்...  

 10 ஆம் வகுப்புத் தாண்டாத விஜயலட்சுமி இதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாதென்றில்லை... தாராளமாகப் படலாம். ஆனால் இவற்றையெல்லாம் தன் நேர்மையான சொந்த உழைப்பில் அடைந்திருக்க வேண்டும். ஊரார் வீட்டு ஆண்களை உருட்டி வாயில் போட்டுக் கொண்டு அடைய நினைத்திருக்கக் கூடாது.  பல ஆண்டுகளாக இதையேதான் செய்து வந்திருக்கிறாள். இன்று அநியாயமாக ஓர் உயிர் பலியான பிறகுதான் செய்தி வெளிவந்திருக்கிறது. 

t

   இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் விதவிதமாகத் தன் படம் வெளியிடுவது, கவிதை வரிகளைப் பரப்புவது, தான் ஒரு பூலோக தேவதை  எட்டாக்கனி என்கிற எண்ணத்தைத் தோற்றுவிப்பது, தனிப்பெட்டி அரட்டையில் தனக்குத் தோதான ஆளைத் தேர்ந்தெடுத்து 'அடுத்தடுத்த செயல்'களில் வீழ்த்தி தன்னை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்வது, அதையே பிணையாக வைத்து தனக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக் கொள்வது, சட்டி காலியானவுடன் கழற்றி விடுவது... சிக்கல் ஏற்பட்டால் 'மீடியா' செல்வாக்கு, அரசியல்வாதிகள் நட்பைக் காட்டி மிரட்டுவது....இது இவளது வழமையான செயல்வரிசை (modus operandi)! 

    ஒரே நேரத்தில் பல ஆண்களை நிர்வகித்து வந்திருக்கிறாள்.... அதிலெல்லாம் கைதேர்ந்தவள்... இங்கே  ஊடக, பத்திரிகை, இயக்க  வட்டாரங்களில் இவளது ஆட்டம் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. யாரைக் கேட்டாலும் இரண்டு புதுக்கதை சொல்கிறார்கள். மலைப்பாக இருக்கிறது .

    இளைஞர்கள், இளம்பெண்கள் இதுபோன்ற தூண்டில்களில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காகவே இந்தப் பதிவு !
   அதற்காகவே ஓர் இளைஞன் உயிரை விட்டிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்’’என்று தெரிவித்திருக்கிறார்.