கமிஷன்,கலெக்‌ஷன், கரப்ஷன் இதுவே அதிமுகவின் தாரக மந்திரம் - சேகர்பாபு குற்றச்சாட்டு..

 
 கமிஷன்,கலெக்‌ஷன், கரப்ஷன் இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்  -  சேகர்பாபு குற்றச்சாட்டு..

கமிசன், கலெக்ஷன், கரெப்ஷன் என்பதை தாரக மந்திரத்தோடு  கடந்த அதிமுக ஆட்சி செயல்பட்டதாகவும்,   கடந்த 10 ஆண்டுகளாக செய்த வேலையை முதலமைச்சர் ஓராண்டு காலத்தில் செய்து காட்டியிருக்கிறார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.  
 
சென்னை  திரு.வி.க நகர் மண்டலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “கடந்த காலங்களில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நின்றதோ அந்த பகுதிகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால்,  இன்று எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்காத நிலை உள்ளது.

அமைச்சர் சேகர் பாபு

திரு.வி.க. நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் 90 - 95% இடங்களில் அகற்றப்பட்டு விட்டது. திரு.வி.க. நகரில் மண்டலத்தில் கடந்தாண்டு 17 சென்டிமீட்டர் மழை பெய்தது. இந்த ஆண்டு 3 நாட்களில் மட்டும் 33 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.  இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்திருந்தும் கூட பாதிப்பு என்பது 20 சதவீதம் வரை குறைவாகவே ஏற்பட்டுள்ளது. தென் சென்னையில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது மகிழ்ச்சியை தருகிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டால் சீர் அழிந்து கிடந்தது. சென்னையில் அடுத்த ஆண்டு பெய்யக்கூடிய மழைக்கு இதுபோன்று தண்ணீர் தேங்காது.

 கமிஷன்,கலெக்‌ஷன், கரப்ஷன் இதுவே அதிமுகவின் தாரக மந்திரம்  -  சேகர்பாபு குற்றச்சாட்டு..

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செய்த வேலையை முதலமைச்சர் ஓராண்டு காலத்தில் செய்து காட்டியிருக்கிறார். எங்களை குறை கூறவில்லை என்றாலும், குறை கூறினாலும் எங்களுடைய பணிகள் தொடரும்.  கமிசன், கலெக்ஷன், கரெப்ஷன் என்பதை தாரக மந்திரத்தோடு செயல்பட்ட ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி. சென்னை மாநகரம் திமுகவின் கோட்டை சட்டமன்றமாகட்டும், நாடாளுமன்றமாகட்டும், உள்ளாட்சி ஆகட்டும் அனைத்துமே திமுகவின் கைவசம். வடசென்னையைப் பொறுத்தவரை பள்ளமான பகுதி, அதிக மக்கள் வசிக்கின்ற, குறுகளான சாலைகளை கொண்ட பகுதி. எனவே அந்த பகுதிகளில் 1 லட்சம் அளவுள்ள மின்மோட்டார்கள் கொண்டு தண்ணீரை வெளியேற்றப்பட்டது.

வடசென்னை மக்கள் வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்கள் மட்டுமல்ல, திமுகவை வாழ வைக்கும் மக்கள் அவர்களை வாழ வைப்போம்.  வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கக்கூடிய பணிகள் தொடர்ந்து வழங்கப்படும். மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். கால்வாய்களில் அடைப்பு இருந்தால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.