துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்!!

 
tn

வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கொண்டு வரப்படும் சரக்குகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  இதற்காக 5000 மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்கி வருகின்றன.  கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்த ப்படவில்லை.  இதனால்  சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இயங்கும் கண்டெய்னர் லாரிகளின் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக  அறிவித்தனர்.  

tn

இந்நிலையில் சென்னை துறைமுகம் மற்றும் காட்டு பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகளின் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 80% வாடகை உயர்வு வழங்க வேண்டும் என துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

tn

கடந்த 2014 ஆம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது . இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.