"அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குக" - ஜி.கே. வாசன்

 
ttn

தமிழக அரசு , பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து பயிர் காப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .  விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதால் , பயிர்கள் பாதிக்கப்படும்போது , அதற்கான காப்பீட்டை , காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

paddy farm

பயிர் காப்பீடு முறையாக கணக்கிடப்படுவதில்லை என விவசாயிகள் கூறுகின்றனர் . குறிப்பாக திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்படி சம்பா , தாளடி நெற்பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பிரீமியம் செலுத்தியிருந்தார்கள் . கடந்த சம்பா , தாளடி நடவு முடிந்தவுடனும் , அறுவடைக்கு முன்னதாகவும் பருவம் தவறிய பெருமழையினாலும் , ஆனைக்கொம்பன் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் தொடர் மழையின் காரணமாக நெல் மகசூலில் அதிக அளவு இழப்பு ஏற்பட்டதால் ஏற்கனவே முறையாக கணக்கீடு செய்து , காப்பீட்டுத் தொகையை வழங்கியிருக்க வேண்டும் . அதாவது சம்பா , தாளடி நெல் பயிரில் விவசாயிகளுக்கு எவ்வளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதோ அதை வழங்க வேண்டியது காப்பீட்டு நிறுவனங்களின் கடமை . காப்பீட்டு நிறுவனங்கள் பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையை சரியான முறையில் வழங்கவில்லை என்ற குறை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது . 

paddy

இந்நிலையில் பயிர் காப்பீடு நிறுவனங்களின் மூலம் சுமார் 481 கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வரப்பெற்றுள்ளது . ஆனால் பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர் காப்பீடு தொகை செலுத்தப்படவில்லை . மேலும் , காப்பீட்டு நிறுவனங்கள் தருவதாகச் சொன்ன 481 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையும் போதுமானதாக இல்லை . காப்பீட்டு நிறுவனங்கள் அரசு கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

paddy pundles
 2021 ஆம் ஆண்டில் காப்பீடு செய்த நிலையில் அந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் . உதாரணத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 வட்டாரத்தில் 7 கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டை அறிவித்து மற்ற கிராமங்களுக்கு அறிவிக்காமல் இருப்பது காப்பீடு கிடைக்கும் எனக்காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது . தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 36 லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டதால் , விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர் . அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் எனவே தஞ்சாவூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் பயிர் காப்பீடு செய்து இழப்பீட்டை எதிர்நோக்கியிருக்கும் தொகையை இனியும் காலம் தாழ்த்தாமல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.