வங்கக்கடலில் உருவான ‘சிட்ரங்’ புயல்.. தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

 
வங்க கடலில் உருவாகிறது சிட்ரங் புயல்!!


 வங்கக்கடலில் சிட்ரங் புயல் உருவானதையடுத்து, தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று  ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  பின்னர்  நேற்று அதிகாலையில் வடமேற்கு திசை நோக்கி  நகர்ந்து, தற்போது   மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்திருக்கிறது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு வழங்கிய  'சிட்ரங்' என்கிற  பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இந்த   'சிட்ரங்' புயலானது   வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளான  டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கிறது.  

வங்கக்கடலில் உருவான ‘சிட்ரங்’ புயல்.. தமிழத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

 இந்த சிட்ரங் புயல்  காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையிலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், நாளை முதல் 27-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழகத்தில்  அக்டோபர் மாத  4-வது வாரத்திற்கெல்லாம்  வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிடும்.  ஆனால்   சிட்ரங் புயலால் தான்  தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் சற்று தாமதம் ஆகியிருக்கிறது.  இந்த புயல் கரையைக் கடந்தபிறகுதான், வடகிழக்குப் பருவமழை எப்போது  தொடங்கும்  என்பதை கணிக்க முடியும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.