‘ஆதார் - மின் இணைப்பு.. ரூ.10 செலுத்தினால் மின்சாரம் துண்டிக்கப்படாது’ - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..

 
Sylendra babu

சைபர் மோசடிக்கு எல்லை கிடையாது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.  
 
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள   அரங்கத்தில், ‘சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிஙரங்கம்  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழக  டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, “சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது.  எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம்.  எனவே,  பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓடிபி ஏன் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண் யாராவது கேட்டால் அவளிடம் பகிரக்கூடாது இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது

EB

எனவே,  தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக  46 காவல்நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்காக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம்..” என்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு,   தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடம்  செல்போன் உள்ளது.  இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.  எனவே உலகத்தில் உள்ள எந்த நபரிடம் இருந்தும் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம்.  

cyber crime

தற்போது,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால்  உங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை .  எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி , நாங்கள் அனுப்புகிற லிங்கில் ரூ. 10 செலுத்துங்கள்; அப்போது  உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது என்று கூறுவார்கள்.  அப்படி அவர்கள் அனுப்பும் லிங்கில் பணம் செலுத்தினால்,  நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள் என்றார்.  சைபர் குற்றங்களும் ஏமாற்றப்பட்டால் 1930 இந்த எண்ணிற்கு புகார் கொடுக்கலாம்  என்றும் தெரிவித்தார்.