புத்தாண்டு - தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார் விஜயகாந்த்

 
Vijayakanth Vijayakanth

ஆங்கில புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

2023 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், நாடு முழுவதும் மக்கள் குடும்பத்துடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.  ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

vijayakanth

இந்நிலையில், புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம். அதேபோன்று 2023-ம் ஆண்டு புத்தாண்டையொட்டி, தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை முதலே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். பின்னர், காலை 11 மணி அளவில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அப்போது கேப்டன்..கேப்டன்.. என்று மூழங்கி உற்சாகத்துடன் அவரை தொண்டர்கள் சந்தித்தனர். விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கையசைத்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.