'இதை செய்து மட்டும்' பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது!!

 
arivalayam

கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பாஜக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்க கூடாது என்று முன்னாள் எம்.பி.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து தனியார் நிகழ்ச்சி விவாதம் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு உலகளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.  நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்துக்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு எழுந்ததால் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை ஆதரித்து ட்வீட் செய்த நிர்வாகி நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

tn

இந்நிலையில் திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் மஸ்தான்  வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை!

bjp

அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.