எடப்பாடி வசிக்கும் வார்டில் அதிமுக பரிதாப தோல்வி - கதறும் தொண்டர்கள்!

 
எடப்பாடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வெற்றியைப் பதிவு செய்து வருகிறது ஆளுங்கட்சியான திமுக. குடும்ப பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்காதது, நகைக்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசில் குறைபாடு, பாஜகவை விட்டு பிரிந்ததால் கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் என பல்வேறு சாதகமான அம்சங்கள் அதிமுகவின் பக்கம் இருந்தன. இதனால் எப்படியும் திமுகவுக்கு 60% வெற்றி தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வுகள் முடிவுகளோ திமுக மீது மக்களுக்கு நன்மதிப்பு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. 

குறிப்பாக சட்டப்பேரவை தேர்தலைக் காட்டிலும் பெருவாரியான மக்களின் நம்பிக்கையை ஆளும் திமுக பெற்றுள்ளது. அதிமுக கொங்கு மண்டலத்தில் எப்போதுமே பலமாக இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே அதிரிபுதிர் வெற்றிபெற்ற திமுகவால் கோவையில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெற முடியவில்லை. இதுவே அதற்கு சாட்சி. ஆனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது திமுக.

தமிழக தேர்தல் முடிவுகள்: அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பழனிசாமி, பாதி  அமைச்சர்கள் மட்டுமே கரை சேர்ந்தனர் - வாக்கு வித்தியாசம் என்ன ...

எஸ்பி வேலுமணியின் இரும்புக்கோட்டையாக இருந்த தொண்டாமுத்தூர் பேரூராட்சியை திமுக முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை வென்று கறுப்பு, சிவப்பு கொடியைப் பறக்கவிட்டுள்ளது திமுக. இச்சூழலில் அடுத்த பேரிடியாக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டையும் சேர்த்து கைப்பற்றியுள்ளது திமுக. எடப்பாடி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 23ஆவது வார்டில் வசிக்கிறார்.  இங்கே அதிமுக தோல்வியுற்றிருப்பது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.