திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம்!!

 
arivalayam

முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

stalin

இதுக்குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.

tn

அதுபோது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.