4,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற இளம் வேட்பாளர்!

 
tn

திமுக வேட்பாளரான  பரிதி இளம்வழுதியின் மகன்  4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

tn

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி , 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்  தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10.30 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2  வார்டில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல 2 சுயேட்சை வேட்பாளர்கள்  வெற்றி பெற்றுள்ளனர். 

rn

இந்நிலையில் சென்னை மாநகராட்சி 99வது வார்டில் திமுக வேட்பாளரான பரிதி இளம்வழுதியின் மகன்  4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் ஐஏஎஸ் சிவகாமியை தோற்கடித்தார் பரிதி இளம்சுருதி. அதேபோல் வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.சென்னை 136 வது வார்டில் போட்டியிட்ட திமுக இளம் வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 7வது வார்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மகன் மொகத்யார் மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார்