மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

 
mks-talin-4

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு முதல் முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

arivalayam

இந்த கூட்டத்தில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாகவும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய கூட்டணியில் எந்த கட்சியை கூடுதலாக சேர்க்கலாம் என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட இருக்கின்றன. மாவட்டங்களில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு,  அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் இடையே அரசு பணி கான்ட்ராக்ட் தொடர்பாக நிலவும் பனிப்போர் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.