டிசம்பர் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

 
arivalayam

வருகிற டிசம்பர் ஒன்றாம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை , அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும். அப்போது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே அந்த அறிக்கையில் பொருள்: இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.