"திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
stalin

வள்ளலாரின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு, இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலரை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வள்ளலார் நகரை உருவாக்கியவர் கருணாநிதி; ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல திமுக.ஆனால் ஆன்மிகத்தை தங்களது சொந்த நலனுக்கும், உயர்வு-தாழ்வு கற்பிக்கவும் பயன்படுத்துவோருக்கு எதிரானது திமுக. கோட்டைக்கு வருவதை விட கோயிலுக்கு அதிகம் செல்பவர் தான் அமைச்சர் சேகர் பாபு;அவர் தினசரி 3 ஊர்களில் உள்ள கோயில்களில் சுற்றி வருபவர். அன்னதானம் வழங்குவது மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல.ஜாதி,மத வேறுபாடுகளற்ற சமநிலை சமூகம் அமைக்க பாடுபடுவதே அவர் வழியில் நடப்பது; வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு ஓராண்டுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்படும்.அதற்கு ரூ. 3.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tn

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என மதத்தை வைத்து பிழைக்கும் சிலர் கூறிவருகிறார்கள்; திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல.தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள். பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும்,அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த திராவிட மாடல் அரசு,வள்ளலாருக்கு தனி பெருங்கருணை நாள் அறிவித்தது சிலருக்கு ஆச்சரியமாக, அதிர்ச்சியாக,இருக்கலாம் " என்றார். 

tnn

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக  சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். 'சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனை எப்படி அமைப்பது என்பது குறித்து வல்லுநர் குழு ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்" என்றார்.