முதல்முறையாக குமரி பேரூராட்சியை கைப்பற்றியது திமுக!!

 
ttn

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஆளுங்கட்சியான திமுக இதுவரை 155 மாநகராட்சி, 85 நகராட்சி, 593 பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 மாநகராட்சி, 23 நகராட்சி மற்றும் 136 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் 18 பேரூராட்சி வார்டுகளில் 11 வார்டுகளின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக 9 இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி கப்பியறை பேரூராட்சி 1-வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆன்சி சோபா ராணி வெற்றி பெற்றுள்ளார்.  இதன் மூலம் கன்னியாகுமரி பேரூராட்சியை முதன்முறையாக திமுக கைப்பற்றியது. 

election

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டில்  திமுக 12, அதிமுக 15, மதிமுக 2, காங்கிரஸ் 2, விசிக 1, சுயேட்சை 1 என வெற்றி பெற்றுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய 4 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது.

vote

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில், திமுக முன்னாள் அமைச்சர் நாராயணசாமியின் பேத்தி மீனாட்சி சூரியபிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் 20ல் திமுக, மதிமுக மற்றும் அதிமுக தலா 1 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.