மெடிக்கல் ஷாப்பில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு - உரிமையாளர் தப்பி ஓட்டம்!!

 
tn tn

மருந்து கடையில் கருக்கலைப்பு செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் நடைபெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் வர்ணிகா மற்றும் 3 வயதில் வர்ஷினி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இதையடுத்து அனிதா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் மூன்றாவது குழந்தை வேண்டாம் என வேல்முருகன் -அனிதா தம்பதி முடிவு செய்த நிலையில் கருவை கலைக்க முடிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் மருந்து கடை நடத்தி வரும்முருகன் என்பவரிடம் கடந்த ஐந்தாம் தேதி இதுபற்றி தெரிவித்துள்ளனர். அப்போது மருந்து கடையில் வைத்து அனிதாவிற்கு முருகன் கருக்கலைப்பு செய்துள்ளார்.

tn
இதில் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் அனிதா சுயநினைவை இழந்துள்ளார்.இதனால் பதறிப்போன மருந்தகம் உரிமையாளர் முருகன்  தனது காரில் வேல்முருகன் மற்றும் அனிதாவை ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றார்.  மருத்துவமனையில் அனிதாவை சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு முருகன்  அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.

tn

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனிதா நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் முருகனை தேடி வருகின்றனர். முருகன் மருந்து கடை நடத்துவதற்கு உரிய படிக்கவில்லை என்றும் இதற்கு முன்பு ஜவுளிக்கடை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியது.