தமிழக சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது!

 
govt

ஏப்ரல் 6ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
,
தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு முதல் முறையாக கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.  இதைத்தொடர்ந்து கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.  இதை தொடர்ந்து நேற்று பட்ஜெட் மீதான கேள்விக்கு நிதியமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் பதிலுரை அளித்தார். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்குகிறது.  கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்ய மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

tn

தமிழக பட்ஜெட் கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று செய்தியாளர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 6 ம் தேதி தொடங்கும் என்றும் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் இடம் இடம்பெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடத்தில் மீண்டும் பேரவை செயல்படுமா? என்ற கேள்விக்கு,  எடுத்தோம் , கவிழ்த்தோம் என எதையும் செய்துவிட முடியாது என்று விளக்கமளித்துள்ளார்.