மீண்டும் ஹீமா தாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தனலட்சுமி.. ஆனாலும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்..

மீண்டும் ஹீமா தாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தனலட்சுமி.. ஆனாலும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்..

200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி, ஹீமா தாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த 22 வயதே ஆன இளம் தடகள வீராங்கனை தனலட்சுமி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற  24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ் மற்றும் டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் வீழ்த்தி தேசிய அளவில் கவனம் பெற்றார். அதேபோல் 200 மீட்டர் ஓட்டத்தில் தகுதிச் சுற்றில்   23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையையும்  முறியடிதிருந்தார்.

மீண்டும் ஹீமா தாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தனலட்சுமி.. ஆனாலும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்..

இந்த நிலையில்  இந்த ஆண்டும்  கடந்த 13 ஆம் தேதி  திருவனந்தபுரத்தில்  நடைபெற்ற Indian Grand Prix 1 விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் தனலட்சுமி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.  அத்துடன் வெற்றிக் கோட்டை 23.21 நொடிகளில் கடந்து, கடந்த ஆண்டு தான் நிகழ்த்திய சாதனையையே முறியடித்திருக்கிறார்.   அதோடு மீண்டும் அசாம் மாநிலத்தை சேர்ந்த புகழ்பெற்ற  இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸை வென்றிருக்கிறார் தனலட்சுமி.

மீண்டும் ஹீமா தாஸை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்த தனலட்சுமி.. ஆனாலும் அந்த வாய்ப்பை தவறவிட்டார்..

  இந்த   Indian Grand Prix  போட்டி ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவதற்கான வாய்ப்பாக  பார்க்கப்பட்டது.  தனலட்சுமியைத் தொடர்ந்து ஹீமா தாஸ் பந்தய தூரத்தை 23.45 நொடிகளில் கடந்தார்.  இருப்பினும்  தனலட்சுமி மற்றும் ஹீமா  இருவருமே  காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இம்முறை பெறவில்லை.  காரணம்   இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டில்   200 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க 23.17 நொடிகளிலும், காமன்வெல்த் தொடருக்கு 22.70 நொடிகளிலும்  வெற்றி இலக்கை  கடந்தால் மட்டுமே  தகுதி பெற முடியும் என இந்தியா தடகள விளையாட்டு கூட்டமைப்பு தரநிலை வகுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.