வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு!!

 
KKSSR

வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்ய அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

வருவாய் துறை என்பது நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்குவது.  பொது மக்களின் தேவைகளான பல்வேறு வகையான அடிப்படையான சான்றிதழ்கள் வழங்குதல்,  முதியோர் ,மாற்றுத்திறனாளிகள் ,ஆதரவற்ற பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்கள் ,ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு ஓய்வு ஊதியம் வழங்குதல் ,குடும்ப அட்டை வழங்குதல் ,விபத்து நிவாரணம் வழங்குதல் போன்ற முக்கியமான சேவைகள்  வட்டாட்சியர் அலுவலகம் மூலம் செய்யப்பட்டு வருகிறது. 

KKSSR Ramachandran

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கு பட்டா,  ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் வருவாய்த் துறையின் சேவைகளை பெற வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். 

tn

அத்துடன் அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்தும்,  பொதுமக்களின் கோரிக்கைகள் எவ்வளவு நாட்களில் தீர்க்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.  பின்னர் வருவாய் வட்டாட்சியர்,  அலுவலக வருகை பதிவேடு இதர பதிவேடுகளை ஆய்வு செய்த முதல்வர்,  வட்டாட்சியரிடம் வருகை தந்துள்ள அலுவலர்கள் பணியாளர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.