நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு பரிசு - அரசாணை வெளியீடு!

 
ration shop

நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு  மாவட்ட, மாநில அளவில் பரிசு அளிக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, பணியாளர்களை   ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தேர்வு செய்து அனுப்ப உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 

ration shop

விநியோகத் திட்டம் - நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்குதல் - சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கதக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.08.04.2022 அன்று நடைபெற்ற உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.

ration

"மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் / எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். பொதுவிநியோகத் திட்டம் சீராக செயல்படுவதில் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விற்பனையாளர்களின் சிறந்த பணியினை ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் அளித்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களின் செயல்திறனையும், ஈடுபாட்டினையும் மேம்படுத்தலாம். இதன்பொருட்டு, சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கதக்க வகையிலும் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இதற்கான உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது .