கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 
anbil magesh

மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

tn
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் மர்மம் உள்ளதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள்  பள்ளி மீது தாக்குதல் நடத்தினர்.  பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில்  144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விவாகரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறிய நிலையில் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். 
anbil

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். வன்முறை நடந்த பள்ளியை மீண்டும் சீரமைக்க குறைந்தது 2 மாதங்கள் ஆகும் என்பதால் அங்கு படித்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தின்  நலன் கருதி அவர்கள்  வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள். என்றார். தொடர்ந்து பேசிய அவர், வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும், அரசின் அனுமதியின்றி விடுமுறை அறிவிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.