அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? அண்ணாமலை கடும் தாக்கு!!

 
Annamalai

பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்து கொண்டுள்ளார். 

geetha jeevan

அமைச்சர் கீதா ஜீவனை அச்சுறுத்தும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா  மீது போலீசார் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமைச்சர் கீதா ஜீவன் அண்ணாமலை குறித்து தெரிவித்த கருத்துக்கு  எதிர் கருத்து கூறிய சசிகலா புஷ்பா , சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி கோர்ட் வாசலில் உங்களை போல் அவர் நிற்கவில்லை. அவரைப் பற்றி தரக்குறைவாக பேசினால் கீதா ஜீவன் நாக்கை வெட்டுவோம் என்று கூறியிருந்தார். இதன் காரணமாக தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8வது தெருவில் உள்ள பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பா வீட்டின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக திமுகவினர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.



இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமிழக பாஜக  திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. தயாசங்கர் , மானூர் ஒன்றியத் தலைவர் திரு.சுப்புத்துரை  ஆகியோரை இன்று அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்." என்று  பதிவிட்டுள்ளார்.