கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு.. ; நன்றி தெரிவித்த சரவணன்..

 
கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு.. ;  நன்றி தெரிவித்த சரவணன்..


பாஜக மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து டாக்டர் சரவணனை, அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை  நீக்கியிருக்கிறார். இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு சரவணன் நன்றி தெரிவித்திருக்கிறார்.  

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  வீரமரமணடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல்,  சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவரது உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.  அமைச்சர் அஞ்சலி செலுத்திய பிறகு, மற்றவர்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று கூறியதால்  பாஜகவினர் சிலர்  அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது  காலணி வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tn

இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன், நள்ளிரவில்  தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன், எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பா.ஜ.க. கட்சியில் தொடரவில்லை. பா.ஜ.க.வில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன். என்று  கூறியிருந்தார்.  

கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு.. ;  நன்றி தெரிவித்த சரவணன்..

 இந்நிலையில் , டாக்டர் சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை நகர், மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்  EX.MLA  அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும்,  கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாலும்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.  ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.   

கட்சியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு.. ;  நன்றி தெரிவித்த சரவணன்..

 இதற்கிடையே தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், “பாஜகவிலிருந்து விலகுவதாக நேற்றே அறிவித்துவிட்டேன். இதனை, எழுத்துப்பூர்வமாக அறிவித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாள் களங்கம் விளைவிக்கவில்லை, அவர்கள் தொடர்ந்து களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்.   மத ரீதியாலான மற்றும் காழ்ப்புணர்ச்சியான அரசியல் அவர்கள்  செய்து கொண்டிருக்கிறார்கள்.  இது நல்லதல்ல ” என்று தெரிவித்திருக்கிறார்.